FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் லவ்லினா!

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹெய்ன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

23 வினாடிகள் முன்பு
லவ்லினா போர்கோஹெய்ன்
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியக் குத்துச்சண்டை நட்சத்திரமும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான லவ்லினா போர்கோஹெய்ன், மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் சீன நாட்டின் பலம் வாய்ந்த வீராங்கனையான பாவ் ஜியி என்பவரை எதிர்கொண்டார்.

Advertisement

Advertisement

இந்த வெற்றியின் மூலம், 2014-ஆம் ஆண்டில் மேரி கோமிற்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை லவ்லினா பெற்றுள்ளார்.

ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா போர்கோஹெய்ன்.

இந்தப் போட்டியில் லவ்லினா தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் போட்டி முடிவில் லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாவ் ஜியியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கடந்த முறை ஹங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த லவ்லினா, தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதுதவிர ஆசிய விளையாட்டு மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில், மேரி கோம் தங்கம் வென்றிருந்தார். அதற்குப் பிறகு, 12 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை லவ்லினா படைத்துள்ளார்.

இன்று (அக்.2) லவ்லினாவுக்கு 29-ஆவது பிறந்த நாள். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கம் வென்று அவருக்கும் இந்திய நாடுக்கும் சிறந்த பரிசாக அமைந்திருக்கிறது.

summary

Lovlina Borgohain has ended a 12-year wait for India in women's boxing at Asian Games as she won the gold medal in the women's 75 kg category. Lovlina defeated China's Ziyi Bao by unanimous decision to replicate the feat of the legendary Mary Kom at the games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments