FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேலும் ஒரு பதக்கம் உறுதி! ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை இறுதிக்கு லவ்லினா தகுதி!

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் லவ்லினா இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதைப் பற்றி...

44 வினாடிகள் முன்பு
லவ்லினா.
பகிர்:

ஆசிய விளையாட்டு தொடரின் குத்துச்சண்டையில் இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் 4 நாள்களே மீதமிருக்கும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

Advertisement

Advertisement

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் உள்ள நிஷியோ ஜிம்னாசியத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு போட்டியில் கஜகஸ்தானின் நடால்யா போக்டனோவாவை இந்தியாவின் லவ்லினா எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் கஜகஸ்தானின் நடால்யா போக்டனோவாவின் அதிரடியான ஆட்டத்தால் அவர் 3-2 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் லவ்லினா போர்கோஹைன் அதிக ஆக்ரோஷத்துடன் பதிலடி கொடுத்தார். இதனால், அவர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.

இருவரும் கடுமையாக மோதிக் கொண்ட கடைசி சுற்றில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் லவ்லினா வெற்றி பெற்றதால் அவர் இறுதிக்குத் தகுதி பெற்றார்.

அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கான போட்டியில் லவ்லினா விளையாடவுள்ளார். இதனால், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

summary

Lovlina Borgohain of India progressed to the women’s 75kg boxing final at the Asian Games 2026 after a 3-2 split decision victory over Kazakhstan’s Natalya Bogdanova in the semifinal on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments