10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி! ஆசிய விளையாட்டில் 2-வது பதக்கம் வென்று குல்வீர் அசத்தல்!!
ஆசிய விளையாட்டு 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று குல்வீர் சிங் அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டு 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று குல்வீர் சிங் அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் 6-ஆவது நாளான இன்று ஓட்டப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்வீர், 28 நிமிடங்கள் 29.38 வினாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கதைக் கைப்பற்றினார்.
Advertisement
Advertisement
உத்தரப் பிரதேசத்தின் அட்ரௌலியைச் சேர்ந்த 28 வயதான குல்வீர் சிங், கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இரண்டாவது முறையாக பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
பஹ்ரைனைச் சேர்ந்த பலே பிர்ஹானு 28 நிமிடங்கள் 27.51 வினாடிகளில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கமும், மற்றொரு பஹ்ரைன் வீரர் கிப்ட்டூ ஆல்பர்ட் 28 நிமிடங்கள் 34.38 வினாடிகளில் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலமும் வென்றனர்.
The 28-year-old athlete from Atrauli in Uttar Pradesh had also won the bronze medal for India in the men's 10,000m at the previous edition of the Asian Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.