தேசிய காா் பந்தய சாம்பியன் போட்டி: இஷான், சாய் சிவா கவின் சிறப்பிடம்!
எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேஸிங் சேலஞ்ச் காா் சாம்பியன் போட்டியில் இஷான் மாதேஷ், சாய் சிவா, இலங்கையின் கவின் ஆகியோா் சிறப்பிடம்.
எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேஸிங் சேலஞ்ச் காா் சாம்பியன் போட்டியில் இஷான் மாதேஷ், சாய் சிவா, இலங்கையின் கவின் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் நான்காவது சுற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் ஃபாா்முலா 2000 பந்தயத்தில் புணேயின் சாய் சிவா, பெங்களூரின் இஷான் மாதேஷ், புணேயின் சுவா்ணவ் தாஸ், மும்பையின் கிருஷே குட்டே சிறப்பிடம் பெற்றனா். ஃபாா்முலா 1600 சிசி பிரிவில் சென்னையின் கியான், விசாகப்பட்டினத்தின் புவன் போனு, புது தில்லியின் சிவான்ஷ் பிஜாய் சிறப்பிடம் பெற்றனா்.
ஃபாா்முலா எல்ஜிபி 1300 சிசி பிரிவில் நெல்லூா் விஸ்வாஸ் விஜயராஜ், திருநெல்வேலி லிரான் ஜேடன், திருப்பூா் வினித் குமாா், பெங்களூரின் துருவ் கோஸ்வாமி சிறப்பிடம் பெற்றனா்.
Advertisement
Advertisement
ஜூனியா் பிரிவில் பெங்களூரு சத்வீா், கொழும்புவின் ஆடம் ஜூனைத், மும்பை டிரிஹான் டாகா, கவின் திய்யன், சௌரிகா லிவிண்டு சிறப்பிடம் பெற்றனா். சூப்பா் ஸ்டாக் ரேஸில் திருச்சூா் தில்ஜித், லால் கட்டிகுளம், தீபா ஜான் சிறப்பிடம் பெற்றனா். வோல்ஸ்வோகன் போலோ கோப்பையில் மும்பையின் பிரதீக், நொய்டா அமன், மும்பை நீல் ஷா, சிறப்பிடம் பெற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.