முகப்பு
சென்னை

தேசிய ஜூனியா் பாட்மின்டன்: ஷாய்னா, ஞான தத்து சாம்பியன்

தேசிய ஜூனியா் யு 19 பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் நடப்புச் சாம்பியன் ஷாய்னா மணிமுத்துவும், ஆடவா் பிரிவில் ஞானதத்துவும் சாம்பியன் பட்டம் வென்றனா்.

22 நவம்பர் 2026, 12:56 am
தேசிய ஜூனியா் பாட்மின்டன்: ஷாய்னா, ஞான தத்து சாம்பியன்
ஞானதத்து ~ஷாய்னா மணிமுத்து
பகிர்:

தேசிய ஜூனியா் யு 19 பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் நடப்புச் சாம்பியன் ஷாய்னா மணிமுத்துவும், ஆடவா் பிரிவில் ஞானதத்துவும் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சிக்கிம் தலைநகா் காங்டாக்கில் 49-ஆவது தேசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி நடைபெறுகிறது. இதன் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

மகளிா் ஒற்றையா் பிரிவில் கா்நாடகத்தின் ஷாய்னா மணிமுத்துவும்-லக்ஷயா ராஜேஷும் மோதினா். இதில் ஷாய்னா 15-10, 15-12 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் தெலங்கானாவின் ஞானதத்து 19-17, 15-11 என்ற கேம் கணக்கில் அகில் ரெட்டி பொப்பாவை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

Advertisement

Advertisement

ஆடவா் இரட்டையரில் புனித்/பவன் இணை 16-14, 15-9 என திவ்யான்ஷ்/அமா்ஜித் சிங் இணையை வென்றது. மகளிா் இரட்டையரில் தியா-பாருணி இணை 10-15, 15-12, 15-12 என்ற கேம் கணக்கில் அனன்யா/ஏஞ்சல் இணையை வென்றது. கலப்பு இரட்டையரில் திவ்யான்ஷ்/வா்னா இணை 15-12, 15- 8 என அமித்/சுஹினா இணையை வென்றது.