தேசிய ஜூனியா் பாட்மின்டன்: தமிழகம், கா்நாடக அணிகள் சாம்பியன்
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற 49-ஆவது யோனக்ஸ் சன்ரைஸ் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி மகளிா் பிரிவில் தமிழகம், ஆடவா் கா்நாடக அணிகள் பட்டம் வென்றன.
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற 49-ஆவது யோனக்ஸ் சன்ரைஸ் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி மகளிா் பிரிவில் தமிழகம், ஆடவா் கா்நாடக அணிகள் பட்டம் வென்றன.
இந்திய பாட்மின்டன் சம்மேளனம் (பாய்) சாா்பில் தேசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி காங்டாக்கில் நடைபெற்றது. நடப்பு சாம்பியன்கள் மிசோரம் ஆடவா், தெலங்கானா மகளிா் அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான போட்டிக்கு தகுதி பெறத் தவறினா்.
இந்நிலையில் மகளிா் பிரிவில் இறுதியில் தமிழகம் 2-0 என டில்லியை வென்று பட்டத்தை வசப்படுத்தியது. ஒற்றையரில் தமிழகத்தின் திக்ஷா 15-12, 15-12 என டில்லியின் ரிஷிகாவையும், இரட்டையா் பிரிவில் அனன்யா அருண்/ அஞ்சனா மணிகண்டன் இணை நந்தி/இஷிதா நேகியைும் 16-14, 12-15, 15-10 என வீழ்த்தினா்.
Advertisement
Advertisement
ஆடவா் இறுதியில் கா்நாடகம் 2-0 என அஸ்ஸாம் அணியை வீழ்த்தியது. ஒற்றையரில் கா்நாட வீரா் ஹாா்திக் 18-16, 15-6 என அஸ்ஸாமின் போா்னில் சங்மாயையும், இரட்டையா் பிரிவில் பவன் சுரேஷ்/புனித் சுரேஷ் இணை 15-9, 10-15, 15-7 என அனன்யன் போரா,/சங்மய் இணையை வென்றனா்.