வில்வித்தையில் உலகச் சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய மகளிரணி!
ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய மகளிரணியைப் பற்றி...
ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் இந்திய மகளிரணி தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய அணியினர் இறுதிப் போட்டியில் வலிமைமிக்க சீனாவை 238 - 234 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தனர்.
சீனாவின் வுனியர், யூ வாங் மற்றும் ஃபாங்யாவோ வெய் ஆகியோர் அடங்கிய அணி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
நடப்பு தொடரில் 7 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட மொத்தமாக 54 பதக்கங்களை வென்று இந்திய அணி 10 ஆம் இடத்தில் இருக்கிறது.
The Indian women's compound archery team delivered a sensational performance to beat China and retain the Asian Games gold medal with a world-record score here on Wednesday.