உலகக் கோப்பை முடிந்த பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ள ‘83’ கிளைமாக்ஸ்!
2019 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14 அன்று நடைபெறவுள்ளது...
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிகழ்வு 83 என்கிற ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது.
கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். கபிலின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
83 படக்குழு, தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 2019 உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் இது படப்பிடிப்புக்கும் உதவுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் 2019 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14 அன்று நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகு 83 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஏப்ரல் 10 அன்று 83 வெளிவரவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.