ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தனுஷ் கோட்டியான் அணியில் சேர்ப்பு

யாரும் எதிர்பாராத விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்த நிலையில், அவருக்குப் பதிலாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனுஷ் கோட்டியான் (கோப்புப் படம்)

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்தியா ஏ அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பெற்றிருந்தார். விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் அண்மையில் தனுஷ் கோட்டியான் மும்பை அணிக்காக 2 விக்கெட்டுகள் மற்றும் 39 ரன்கள் எடுத்தார்.

தனுஷ் கோட்டியான் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அவர் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக அணியில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்படுவதாக இருந்தது எனவும், அக்‌ஷர் படேல் ஓய்வு கேட்டதால் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் 1,525 ரன்கள் மற்றும் 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் வெளியானது படையாண்ட மாவீரா!

ராகுல் காந்தி, ராணுவத்தை அவமதிக்க முயற்சிக்கவில்லை: பிரியங்கா காந்தி

படத்தில் ஹீரோவாக நடிக்கும் கானா வினோத்! நாயகி யார் தெரியுமா?

2-வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங் இடையே வாக்குவாதம்!

SCROLL FOR NEXT