அணிக்காக தொடர்ச்சியாக பந்துவீச்சில் ஈடுபடத் தயாராக உள்ளேன்: நமன் திர்
அணிக்காக தொடர்ச்சியாக பந்துவீச்சில் ஈடுபடத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நமன் திர் தெரிவித்துள்ளார்.
அணிக்காக தொடர்ச்சியாக பந்துவீச்சில் ஈடுபடத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நமன் திர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அணிக்காக தொடர்ச்சியாக பந்துவீச்சில் ஈடுபடத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நமன் திர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு பேட்டராக பேட்டர்கள் ஷாட்டுகளை எப்படி விளையாடுவார்கள் என்பதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். நான் பந்துவீச்சில் ஈடுபடும்போது, பேட்டர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை கணித்து அதற்கேற்றவாறு பந்துவீசுகிறேன். தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடிக்கவிட்டு விக்கெட் எடுக்க வேண்டும் என நான் நினைப்பதில்லை.
உதாரணமாக கமில் பூரன் பேட்டிங் செய்யும்போது, நான் தவறுதலாக மூன்று பந்துகளை வீசினேன். அதன் பின், அவர் என்ன ஷாட் விளையாடுவார் என நினைத்துப் பந்துவீசினேனோ அதே ஷாட்டினை விளையாடி ஆட்டமிழந்தார். பேட்டர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை கவனித்து செயல்பட்டது எனக்கு உதவியது.
நான் பேட்டிங் ஆல்ரவுண்டர். எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் என்னால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல் தொடரில் எனக்கு பந்துவீச அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்காக தேவைப்படும்போதெல்லாம் பந்துவீசத் தயாராக இருக்கிறேன் என்றார்.
Indian all-rounder Naman Dhir has stated that he is ready to bowl continuously for the team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.