இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ஜெர்சியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலர் ஜெய் ஷா ஆகியோர் வெள்ளிக்கிழமை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதிய ஒருநாள் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வதோதராவில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி புதிய ஜெர்சியை அணிந்து விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசுகையில், “இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஜெர்சி அணிந்து விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
தோல் பட்டையில் மூன்று வண்ணங்கள் அழகாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு சிறப்பான ஒருநாள் ஜெர்சி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்திய ரசிகர்களும் இந்த ஜெர்சியை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி வருகிற டிசம்பர் 5 முதல் 11 ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.