டெவால்டு பிரெவிஸ் படம்; இன்ஸ்டா / புரோட்டியாஸ் மென்
கிரிக்கெட்

டெவால்டு பிரெவிஸ் 125*: ஆஸி. வெற்றிபெற 219 ரன்கள் இலக்கு!

ஆஸி.- தெ.ஆ. இடையேயான இரண்டாவது டி20 போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தெ.ஆ. அணி 6.5 ஓவரில் 57/3 ரன்கள் எடுத்திருந்தது.

டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.

ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 125 ரன்கள் எடுத்து அசத்தினார்.

56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுன்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்தார்.

தனியாளாக தென்னாப்பிரிக்க அணியை டெவால்டு பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார். இறுதியில் தெ.ஆ.அணி 218/7 ரன்கள் எடுத்தது.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல், த்வார்ஷியஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

South Africa scored 220 runs in 20 overs in the second T20I against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர்கிறேன்... ஐஸ்வர்யா மேனன்!

அலைபாயுதே... மேகா ஷுக்லா!

வசந்தம்... அதுல்யா ரவி!

ஜஸ்ட் லைக் இட்... திஷா பதானி!

”துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை வரவில்லை!” | தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!

SCROLL FOR NEXT