படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சிறப்பான தருணம்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்தோம். ஆடுகளத்தில் களமிறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளோம். எங்களுக்கு அனைத்து சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐ-க்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அறிமுக டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT