மிலிந்த் ரெகே  
கிரிக்கெட்

மும்பை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் மிலிந்த் ரெகே காலமானார்.

DIN

ரஞ்சிக் கோப்பைக்கான மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான மிலிந்த் ரெகே புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 76

மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரெகே, புதன்கிழமை காலை 6 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

மிலிந்த் ரெகே தனது 26 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து விலகியிருந்தார், பின்னர் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ரெகே மும்பை அணியின் ரஞ்சி கேப்டனாகவும் இருந்தார்.

1966-67 மற்றும் 1977-78 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் 52 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மிலிந்த் ரெகே, 1532 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 126 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி: 2ஆவது பந்திலேயே காயத்தால் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் குழந்தைப் பருவ நண்பரான மிலிந்த், அவருடன் பள்ளி, கல்லூரியில் படித்தது மட்டுமின்றி தாதர் யூனியன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலும் அவருடன் இணைந்து விளையாடியுள்ளார். மிலிந்த் மும்பை அணி கேப்டன், அணித் தேர்வர் மட்டுமின்றி மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

மிலிந்த் ரெகேவின் மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க...  ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT