FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கன் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமனம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

9 ஜனவரி 2025, 2:31 pm IST
யூனிஸ்கான்
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச மைதானங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுமா?

ஆப்கானிஸ்தான் அணி குரூப் - பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கான போட்டிகள் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

யூனிஸ்கான் பாகிஸ்தான் அணிக்காக 256 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். மேலும், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,000 க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார்.

பாட் கம்மின்ஸுக்கு காயம்..! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது சந்தேகம்!

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நசீப்கான் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதால், பாகிஸ்தானைச் சேர்ந்த அனுபவமிக்க வீரர் எங்கள் அணியின் ஆலோசகராக இருப்பது நல்லதாக இருக்கும்.

நாங்கள் ஏற்கனவே, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை நடந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களையே ஆலோசகராக நியமித்திருந்தோம்.

அதேபோல, வரவிருக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு யூனிஸ்கானை ஆலோசகாராக நியமித்துள்ளோம். அவருக்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.

பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments