ரோஹித் சர்மா, விராட் கோலி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு பெறுகிறார்களா என்பது குறித்து...

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற உள்ளார்களா என்பது குறித்து அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றால், இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிடுவார்கள் எனவும், குறைந்தது இருவரில் ஒருவராவது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஷுப்மன் கில் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் மற்றும் கோலி ஓய்வை அறிவித்து விடுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய அணியில் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை என அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக பலம் சேர்க்கிறார். விராட் கோலியின் ஆட்டம் குறித்து சொல்லத் தேவையில்லை. அவர் அந்த அளவுக்கு சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அணியில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் வரை பேட்டிங் வரிசை நன்றாக இருப்பதால், முன்வரிசை ஆட்டக்காரர்கள் அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடலாம்.

இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதை நினைத்து ஆவலாக உள்ளோம். கடந்த முறை 50 ஓவர் உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த முறை 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் உறுதியாக உள்ளோம். பெரிய போட்டிகளில் அழுத்தம் என்பது இருக்கும். ஆனால், எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாண்டு விளையாடுகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும். மற்ற போட்டிகளில் விளையாடியதைப் போன்று நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிலும் நாங்கள் விளையாட வேண்டும். துபையில் நான்கு போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால், எந்த ஒரு கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

SCROLL FOR NEXT