முகப்பு
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 2 செப்டம்பர் 2025, 9:45 pm IST
- படம் | AP
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (செப்டம்பர் 2) தொடங்கியது.

லீட்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பென் டக்கெட் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜேமி ஸ்மித் ஒருபுறம் சிறப்பாக விளையாட மறுமுனையில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஜோ ரூட் (14 ரன்கள்), ஹாரி ப்ரூக் (12 ரன்கள்), ஜோஸ் பட்லர் (15 ரன்கள்), ஜேக்கோப் பெத்தேல் (1 ரன்), வில் ஜாக்ஸ் (7 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.

தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், நண்ட்ரே பர்கர் மற்றும் லுங்கி இங்கிடி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பாக விளையாடினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அய்டன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். மார்க்ரம் 55 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரியான் ரிக்கல்டான் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

summary

South Africa won the first ODI against England by 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments