முதல் ஒருநாள்: பிரதீகா ராவல் சதம் விளாசல்; இந்தியா அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இந்தியாவுக்கு 198 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலௌட் பிஸா அரைசதம் கடந்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். மிச்செல் மவுங்கா 29 ரன்கள், மாடெஸ்டர் முபாசிக்வா 25 ரன்கள், சிபோ முகேரி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், கிராந்தி கௌட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தீப்தி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பிரதீகா ரவால் சதம் விளாசல்; இந்தியா அபார வெற்றி!
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 27.1 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் களமிறங்கினர். ஸ்மிருதி மந்தனா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பிரதீகா ராவல் மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதீகா ராவல் சதம் விளாசி அசத்தினார். அவர் 96 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். ஷஃபாலி வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
India won the first ODI against Zimbabwe by 9 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.