முதல் ஒருநாள்: விராட் கோலி, ஷுப்மன் கில் சதம் விளாசல்; இந்தியா அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசல்!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான் கேம்பெல் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 135 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கேம்பெல் 60 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கீஸி கார்ட்டி 13 ரன்கள், கேப்டன் சாய் ஹோப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து, ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் அமிர் ஜாங்கோ ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 108 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அமிர் ஜாங்கோ அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ்ர் அடங்கும். ராஸ்டன் சேஸ் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும், நிதீஷ் குமார் ரெட்டி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
விராட் கோலி, ஷுப்மன் கில் சதம் விளாசல்! இந்தியா அபார வெற்றி!
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 41.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.