2-வது ஒருநாள்: 139 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேற்கிந்தியத் தீவுகள்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 27) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39.3 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் ஸ்டஃபானி டெய்லர் அதிகபட்சமாக 68 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹேலி மேத்யூஸ் 26 ரன்கள், அஷ்மினி முனிசார் 20* ரன்கள், எஃபி பிளெட்ச்சர் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஜிம்பாப்வே தரப்பில் நியாஷா குவான்ஷுரா 4 விக்கெட்டுகளையும், மிட்செல் மவுங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபிரான்சிஸ்கா இரண்டு விக்கெட்டுகளையும், ஆலிண்டர் சாரே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
Batting first in the second ODI against Zimbabwe, the West Indies team was bowled out for 139 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.