FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

3-வது ஒருநாள்: மெதுவாக பந்துவீசிய இந்தியா, மே.தீவுகள் அணிகளுக்கு அபராதம்!

மெதுவாக பந்துவீசிய இந்தியா, மே.தீவுகள் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது பற்றி...

இந்தியா, மே.தீவுகள் அணிகளுக்கு அபராதம் - Photo: ICC
பகிர்:

மூன்றாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கடந்த சனிக்கிழமை நியூ சண்டீகர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச இரு அணி வீரர்களும் தவறிவிட்டதாக போட்டி நடுவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 4 ஓவர்களும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 ஓவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசத் தவறிவிட்டதாக போட்டி நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை இரு அணித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டதால், இந்திய வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதமும், மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு 10 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

summary

3rd ODI: Fines for India and West Indies for slow over-rate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments