FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

24 ஆண்டுகளாக இந்திய அணியின் ஆதிக்கம்; சவாலை எதிர்கொள்ள மே.இ.தீவுகள் தயாரா?

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி பேசியுள்ளார்.

25 செப்டம்பர் 2026, 6:27 pm IST
மேற்கிந்தியத் தீவுகள் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி - படம் | ஐசிசி
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி பேசியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 27) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் வடிவிலான போட்டிகளில் எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதை பரிசோதித்துக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் இந்தியாவில் இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று 24 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாங்கள் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை பரிசோதித்துக் கொள்ள எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சவால் மற்றும் வாய்ப்பு எனக் கூறுவேன். கடந்த 24 ஆண்டுகளாக நாங்கள் இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று கொடுக்கும் மிகப் பெரிய வாய்ப்பு வீரர்களுக்கு கிடைத்திருக்கிறது என்றார்.

கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு கார்ல் ஹோப்பர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

West Indies head coach Daren Sammy has spoken about the three-match ODI series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments