முதல் ஒருநாள்: மாட் ரென்ஷா சதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 295 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மாட் ரென்ஷா சதம் விளாசல்!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 94 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, கூப்பர் கானலி அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 46 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் மிட்செல் மார்ஷ் 36 ரன்கள், ஆலிவர் பீக் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.
ஜிம்பாப்வே தரப்பில் நியூமேன் நியாம்ஹுரி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, பிராட் ஈவன்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் சிக்கந்தர் ராஸா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
Batting first in the first ODI against Zimbabwe, the Australian team scored 294 runs for the loss of 8 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.