FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுச்சேரியில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்: கான்ஸ்டாஸ், இந்திய வம்சாவளி நிகில் சௌதரிக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாம் கான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி, இந்திய வம்சாவளி நிகில் சௌதரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

1 செப்டம்பர் 2026, 2:51 pm IST
பகிர்:

இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் துவார்ஷூயிஸ், கான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்தாண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடர் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி தங்கள் இளம் வீரர்களை தயார்படுத்தும் முனைப்பில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இளம் வீரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் புதுச்சேரியில் நடைபெறும் இரண்டு நான்கு நாள்கள் டெஸ்ட் மற்றும் அதிகாரபூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடுகின்றன.

இந்தத் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் முக்கிய வீரர்கள் பென் துவார்ஷூயிஸ், கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய பிரதான அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற செப். 22 ஆம் தேதி தொடங்கும் நான்கு நாள்கள் டெஸ்ட் போட்டி அக். 2 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதைத்தொடர்ந்து மூன்று அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் அக். 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

நான்கு நாள்கள் டெஸ்ட் அணி: பிரெண்டன் டோகெட், ஜாக் எட்வர்ட்ஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், சாம் ஹார்ப்பர், லியாம் ஹேட்சர், கேம்ப்பெல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, ஃபெர்கஸ் ஓ'நீல், பிலிப், ஜே ரிச்சர்ட்சன், கோரி ரோச்சிசியோலி, ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட்.

ஒருநாள் தொடருக்கான அணி: மாலி பியர்ட்மேன், நிகில் சௌதரி, பென் துவார்ஷூயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, ஸ்பென்சர் ஜான்சன், சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டோட் மர்பி, மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லாச்லன் ஷா.

summary

Australia named a 14-member squad, featuring several players with senior international experience, including pacer Ben Dwarshuis, Sam Konstas and Nathan McSweeney, for their series against India A in Puducherry later this month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments