FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 299 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 8:05 pm IST
- படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.

ஆப்கானிஸ்தானுக்கு 299 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கர்ட்டிஸ் கேம்ஃபர் 84 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து 4 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாரி டெக்டார் அரைசதம் கடந்தார். அவர் 80 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் டாக்ரெல் 31 ரன்கள், ஜோர்டான் நீல் 23 ரன்கள், கேட் கார்மைக்கேல் 22 ரன்கள், கேப்டன் பால் ஸ்டிரிலிங் 20 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். காஸன்ஃபர் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சலீம் மற்றும் நங்யாலியா கரோட்டி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the final ODI against Afghanistan, the Ireland team scored 298 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments