FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜத்ரான், அடல் அதிரடி சதம்... சாதனையுடன் அயர்லாந்து தொடரை வென்றது ஆப்கன்!

இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் செதிகுல்லா அடலின் அதிரடியான சதத்தால் அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஆப்கன் அணி வென்று அசத்தியுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST
ஜத்ரான், செதிகுல்லா அடல்.
பகிர்:

ஆப்கானிஸ்தான் வீரர்கள் இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் செதிகுல்லா அடலின் அதிரடியான சதத்தால் அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஆப்கன் அணி வென்று அசத்தியுள்ளது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி பெல்ஃபாஸ்ட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்து வீசுவதாகத் தெரிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரராகக் களம்புகுந்த ஆப்கன் விக்கெட் கீப்பர் குர்பாஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் செதிகுல்லா அடல் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

இவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராஹிம் ஜத்ரான் 107 ரன்கள் (11 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர்), செதிகுல்லா அடல் 17 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 143 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினர்.

செதிகுல்லா அடல்..

அதன்பின்னர், வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் 25 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ரசூலி 24 ரன்களும், ஓமர்ஸாய் 15 ரன்களும், ரஷீத்கான் 11 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணித் தரப்பில், பைரன் 3 விக்கெட்டுகளும், மார்க் அடைர் மற்றும் கவின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. 2024-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக அடித்திருந்த 339/6 அதிகபட்ச ஒருநாள் போட்டிக்கான ஸ்கோரை முறியடித்து ஆப்கானிஸ்தான் அணி சாதனையையும் படைத்தது.

பின்னர், 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், கேட் கார்மைக்கேல் 5 ரன்களிலும், ஹாரி டெக்டர் 34 ரன்களிலும், விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய ஆண்ட்ரூ பால்ப்ரின் 109 ரன்களும் (9 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்), கர்டிஸ் காம்பர் அதிரடியாக விளையாடி 84 ரன்களும் (8 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

அயர்லாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்கள் மட்டுமே எடுத்தது. யமீன் அகமதுசாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தமாக 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3 -0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இவ்விரு அணிகளும் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை (ஆக. 14) நடைபெறவுள்ளது.

summary

Earlier in the day, Ireland won the toss and elected to bowl first. Afghanistan produced a sensational batting display, posting a record 343/9 in their allotted 50 overs to set Ireland a target of 344 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments