FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடைசி ஒருநாள்: டாம் பாண்டன் சதம் விளாசல்; இலங்கைக்கு 356 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது.

27 செப்டம்பர் 2026, 7:32 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாம் பாண்டன் - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கெனிங்டான் ஓவலில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு முதலில் விளையாடியது.

டாம் பாண்டன் சதம் விளாசல்!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பாண்டன் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பென் டக்கெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, ஜோ ரூட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, டாம் பாண்டன் மற்றும் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹாரி ப்ரூக் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 66 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பாண்டன் சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஜோர்டான் காக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 25 ரன்கள், ஜேமி ஓவர்டான் 21* ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், சச்சிந்து கொலம்பேஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தில்ஷன் மதுஷங்கா மற்றும் ஜனித் லியாநாகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the final ODI against Sri Lanka, England scored 355 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments