FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2-வது ஒருநாள்: டாம் பாண்டன் சதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 356 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது.

46 வினாடிகள் முன்பு
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாம் பாண்டன் - படம் | AP
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

டாம் பாண்டன் சதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 356 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டாம் பாண்டன் சதம் விளாசி அசத்தினார். அவர் 99 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோர்டான் காக்ஸ் 67 ரன்கள், ஜோ ரூட் 62 ரன்கள், வில் ஜாக்ஸ் 54* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன், ரைலி மெரிடித் மற்றும் கூப்பர் கானலி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

summary

In the second ODI against Australia, England batted first and scored 355 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.