FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அதிசயராஜ் டேவிட்சன் அசத்தல்; திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு 2-வது வெற்றி!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 9:43 pm IST
அதிசயராஜ் டேவிட்சன் - படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலில் விளையாடியது.

அரைசதம் விளாசிய சுரேஷ் குமார்; நெல்லை ராயல் கிங்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஜெயராமன் சுரேஷ்குமார் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ராஜ்குமார் அதிரடியாக 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சய் யாதவ் 17 ரன்கள், கே. ராஜ்குமார் 13 ரன்கள் மற்றும் ஜெகதீசன் கௌசிக் 10 ரன்கள் எடுத்தனர்.

நெல்லை ராயல் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சச்சின் ரதி 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹரிஷ் இரண்டு விக்கெட்டுகள், இம்மானுவேல் செரியன், சோனு யாதவ் மற்றும் ராமலிங்கம் ரோஹித் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அதிசயராஜ் டேவிட்சன் அசத்தல்; திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு 2-வது வெற்றி!

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் முகிலேஷ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிஷ் 23 ரன்கள், ரித்திக் ஈஸ்வரன் 18 ரன்கள், கேப்டன் சோனு யாதவ் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

திருச்சி கிராண்ட் சோழாஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கே. ஈஸ்வரன், சஞ்சய் யாதவ் மற்றும் ராஜ்குமார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அதிசயராஜ் டேவிட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Trichy Grand Cholas won by 45 runs against Nellai Royal Kings in the TNPL cricket match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments