FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கதேச டெஸ்ட்: வலிமை வாய்ந்த பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

ஆஸ்திரேலிய அணியினர்.
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் நாளை (ஆக. 13) டார்வினில் தொடங்குகிறது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின் 9 ஆண்டுகள் கழித்து முன்னாள் உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளதால் இந்தத் தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தத் தொடருக்கான 13 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை டெஸ்ட் தொடரில் விளையாட பேட் கம்மின்ஸ் தலைமையில் பலம் வாய்ந்த அணியை ஆஸ்திரேலியா களமிறக்கியுள்ளது.

Advertisement

Advertisement

கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி: ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், கிறிஸ் கேரி, வெப்ஸ்டர், ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஹேசில்வுட்.

summary

Australia have pulled out the big guns for the first Test against Bangladesh in Darwin, with Pat Cummins, Mitchell Starc, Josh Hazlewood and Nathan Lyon all named in the XI as the hosts begin a packed Test schedule in full strength.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments