FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: சித்தார்த் அதிரடி; மதுரை பேந்தர்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

டிஎன்பில் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

- படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)
பகிர்:

டிஎன்பில் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஆண்ட்ரே சித்தார்த் அதிரடி; மதுரை பேந்தர்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பாலசுப்ரமணியம் சச்சின் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவ பிரசாத் தலா 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

மதுரை பேந்தர்ஸ் தரப்பில் பி.சரவணன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்ஜப்நீத் சிங் மற்றும் சோயப் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மதுரை பேந்தர்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first against the Madurai Panthers in the TNPL final, the Kovai Kings scored 182 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments