1 ரன் வித்தியாசத்தில், கடைசி பந்தில் வெற்றி: முதல் எம்எல்சி கோப்பையை வென்றது எல்ஏகேஆர்!
முதல்முறையாக எம்எல்சி கோப்பையை வென்ற லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணி குறித்து...
அமெரிக்காவில் நடைபெற்ற எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் தொடரில் லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணி (எல்ஏகேஆர்) தனது முதல் கோப்பையை வென்றுள்ளது.
ஆக்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது, முதலில் பேட்டிங் செய்த எல்ஏகேஆர் அணி 19.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Advertisement
அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிலிட்சர் 47, காலின் முன்ரோ 40 ரன்கள் எடுத்தார்கள். வாஷிங்டன் அணி சார்பாக பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும் ஓவன், சௌதரி, ரச்சின் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய வாஷிங்டன் அணி 20 ஓவர்களில் 163/9 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியுற்றது. இதில் அதிகபட்சமாக பியானர் 53 ரன்கள் அடித்து, வெற்றிக்கான கனவை கடைசி ஓவர் வரை கொண்டுவந்தார்.
எல்ஏகேஆர் அணி சார்பில் சுனில் நரைன், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தையே மாற்றினார்கள். கடந்த சீசனிலும் வாஷிங்டன் அணி ரன்னர் அப்-ஆக முடித்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஏகேஆர் தனது முதல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருக்கிறது.
Los Angeles Knight Riders pull off last-ball win for first MLC title
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.