நைட் கிளப் அடிதடி... இங்கிலாந்து அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் அதிரடி நீக்கம்!
இங்கிலாந்து அணியிலிருந்து ஸ்டோக்ஸ், அட்கின்சன் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
நைட் கிளப்பில் அடிதடியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி வருகிற ஜூன் 17 ஆம் தேதி ஓவல் திடலில் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
முதல் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸும், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இருவரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடுவதற்காக அங்குள்ள நைட் கிளப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப் அணியின் அகாதெமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்களுக்குள் கைகலப்பாக மாறியுள்ளது. அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றபோது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார்.
அதன்பின் காயமடைந்த அந்த அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாக பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று டெஸ்ட் தொடரில் விளையாடாத ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம்
ஜோ ரூட் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி ப்ரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.
England captain Ben Stokes and Gus Atkinson have been dropped for the second Test against New Zealand after breaching a midnight curfew at a London nightclub. Stokes is reportedly considering his future as the Test captain of England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.