அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்த ஹைதராபாத் அணி குறித்து...
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் அறிமுகமான முதல் சீசனிலேயே ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
எலிமினேட்டர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் 20 ஓவர்களில் 184/7 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
கடைசி ஓவரில் 6 ரன்களை தேவையாக இருக்க, ஹுனையன் ஷா சிறப்பாக பந்துவீசி 3 ரன்கள், 1விக்கெட் எடுத்து அசத்தினார். மொத்தமாக அவர் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
Advertisement
Advertisement
இந்த அணி தொடக்கத்தில் 4 போட்டிகளிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், பலரும் மார்னஸ் லபுஷேனின் தலைமைப் பண்பை கடுமையாக விமர்சித்தார்கள்.
தற்போது அந்த அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளார். போட்டிக்குப் பிறகு மார்னஸ் லபுஷேன் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஹைதாராபாத் கிங்ஸ்மேன் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் மார்னஸ் லபுஷேனைக் குறிப்பிட்டு, “100 சதவிகிதம் கேப்டனுக்கு உகந்தவர்” எனப் பதிவிட்டுள்ளது.
Emotional Labuschagne leads Hyderabad into PSL final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.