FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் இருவர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் இரண்டு பேர் விலகியுள்ளனர்.

15 வினாடிகள் முன்பு
நியூசிலாந்து அணி வீரர்கள் - படம் | AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் இரண்டு பேர் விலகியுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (நவம்பர் 4) தொடங்குகிறது.

இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டுவரத் தாமதம் ஆவதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர்களான மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் விலகியுள்ளனர்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் மார்க் சாப்மேனுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனிலிருந்து அவருக்கு காயம் குணமடைய இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படுவது தெரியவந்தது. ரச்சின் ரவீந்திராவின் தோள்பட்டை காயம் குணமடையவும் இன்னும் சில நாள்கள் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக, இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடுவார் எனக் கூறப்பட்டிருந்த டிம் செய்ஃபர்ட் தற்போது தொடர் முழுவதும் விளையாடவுள்ளார். ஹென்றி நிக்கோல்ஸ் முதல் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளார். டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 4-வது மற்றும் 5-வது போட்டியில் விளையாடவுள்ளார்.

summary

Two New Zealand players have withdrawn from the ODI series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments