FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

க்ளென் பிலிப்ஸ் ருத்ர தாண்டவம்..! இந்தியாவுக்கு 226 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் குறித்து...

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் க்ளென் பிலிப்ஸ் - படம்: ஏபி
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்துள்ளது.

கிற்ஸ்ட்சர்ச்சில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப், மயங்க், அக்‌ஷர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அதிரடியாக விளையாடினார்கள். டிம் செய்ஃபர்ட் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஃபின் ஆலன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, க்ளென் பிலிப்ஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி அரைசதம் கடந்தார்.

இளம் வீரர் ஜேக்கப் 16 பந்தில் 31 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இறுதியில் க்ளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 82* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் டி20யில் இந்திய அணி வெற்றி பெற்ற 226 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருக்கின்றன.

summary

Glenn Phillips' Rudra Tandavam..! New Zealand set a target of 226 runs for India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments