FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு எதிரான தொடர்களிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் விலகியுள்ளார்.

10 அக்டோபர் 2026, 6:17 pm IST
வில்லியம் ஓ’ரூர்க் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் விலகியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் விலகியுள்ளார்.

Advertisement

Advertisement

காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்த வில்லியம் ஓ’ரூர்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் பேசியதாவது: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான தொடர்களை வில்லியம் ஓ’ரூர்க் தவறவிடுவது ஏமாற்றமாக உள்ளது. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால், காயம் காரணமாக இந்தத் தொடர்களிலிருந்து அவர் விலகியுள்ளார் என்றார்.

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மார்க் சாப்மேன் மற்றும் ஸாக் ஃபோல்க்ஸ் அண்மையில் விலகியது குறிப்பிடத்தக்கது.

summary

New Zealand fast bowler William O'Rourke has withdrawn from the ODI and Test series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments