டெஸ்ட் தொடர்: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி குறித்து...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
Advertisement
Advertisement
அடுத்ததாக டெஸ்ட் தொடர் நவ.19ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவிருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டெல் முதல் போட்டியில் பங்கேற்பது உடல்தகுதியைப் பொறுத்து விளையாடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் வீரர் ஜேக்கப் டஃபி இந்தத் தொடரில் இணைந்துள்ளார். கடைசியாக 2024ல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 0-3 என நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. அதன்பிறகு தற்போதுதான் இரு அணிகளும் சந்திக்கின்றன.
நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல் (கீப்பர்), டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிகோலஸ், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், பிளைர் டிக்னர், வில் யங்.