FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசி. நட்சத்திர வீரர் லாக்கி பெர்குசன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து லாக்கி பெர்குசன் விலகியது பற்றி...

லாக்கி பெர்குசன் - AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை காலை ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் லாக்கி பெர்குசனுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாத நிலையில், அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வெலிங்டனில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த பிளேயர் டிக்னருக்கு காயம் ஏற்பட்டது. அவர் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பயிற்சியின்போது நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேவுடன் மோதி கீழே விழுந்ததில் மாட் ஹென்றி காயமடைந்ததால், அவரும் நாளை நடைபெறவுள்ள போட்டியில் விளையாடமாட்டார்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

summary

ODI series against India: New Zealand star player Lockie Ferguson ruled out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.