FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி வரலாற்றுச் சாதனை படைத்தது குறித்து...

40 வினாடிகள் முன்பு
விராட் கோலி - படம் | AP
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டி, வெலிங்டன், எச்.என்.ஆர்.ஒய். விளையாட்டுத் திடலில் இன்று (நவ. 7) நடைபெற்றது.

Advertisement

Advertisement

மழையின் காரணமாக போட்டியைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் டிஎல்எஸ் விதிப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி படைத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 1,971 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில், 1,978 எடுத்து அவரை முந்தி, விராட் கோலி இந்தச் சாதனையைப் படைத்ததுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் பெற்ற 1,978 ரன்களில் 7 சதங்களும் 11 அரை சதங்களும் அடங்கும்.

விராட் கோலியின் இந்தச் சாதனை மூலம் ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Indian cricketer Virat Kohli has achieved a historic milestone in the second ODI against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.