வில் யங் சதம்: இந்தியாவுக்கு 334 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி குறித்து...
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் திடலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். டிம் செய்ஃபர்ட் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய வில் யங் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஃபின் ஆலன் 41, சான் ட்னர் 24 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா சார்பில் ஆகிப் நபி, குர்னூர் பிரார், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
நமன்திர், அர்ஷ்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி ஆல் அவுட்டுக்கு உதவினார்கள். இந்திய அணி ஏற்கெனவே தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடரை சமன்செய்ய நியூசிலாந்துக்கு இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.