இந்தியா - நியூசி. 3-ஆவது ஒருநாள்: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறவிருந்த 3-ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது குறித்து...
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறவிருந்த 3-ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 10) கைவிடப்பட்டது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று காலை ஹாமில்டன் செடான் பார்க் திடலில் நடைபெறவிருந்தது.
Advertisement
Advertisement
மழை காரணமாக தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.