FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குல்தீப் யாதவ் வெளியேற்றம்: இந்திய டெஸ்ட் அணியில் குர்னூர் பிரார் சேர்ப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து...

குர்னூர் பிரார் - படம்: பிசிசிஐ
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ உறுதிசெய்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள், 2டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி நவ.15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Advertisement

Advertisement

டெஸ்ட் தொடர் வரும் நவ.19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவிற்குப் பதிலாக குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெலிங்டனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக குர்னூர் பிரார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாட செல்கிறார்.

இதற்கிடையில், விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் இந்திய அணியில் இணைகிறார். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் குர்னூர் பிராருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் [கேப்டன்], யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் [துணை கேப்டன்], தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் [கீப்பர்], துருவ் ஜூரல் [கீப்பர்], ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குர்னூர் பிரார்.

ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான அணி: ஷ்ரேயாஸ் ஐயர் [கேப்டன்], ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் [கீப்பர்], அக்ஷர் படேல், நமன் திர், ஆகிப் நபி, ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா [கீப்பர்], முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ்

summary

Gurnoor Brar added to Test squad, Kuldeep Yadav released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments