முகப்பு

ஹார்திக் பாண்டியா வந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையடைந்துள்ளது: ரிக்கி பாண்டிங்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்ததும் அணி முழுமையடைந்துள்ளதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

45 வினாடிகள் முன்பு
ஹார்திக் பாண்டியா வந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையடைந்துள்ளது: ரிக்கி பாண்டிங்
ஹார்திக் பாண்டியா - படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்ததும் அணி முழுமையடைந்துள்ளதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்காக மினி ஏலம் கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை டிரேடிங் மூலம் மற்ற அணிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ.18 கோடிக்கு டிரேட் செய்யப்பட்டார். பஞ்சாப் அணியிலிருந்து அர்ஷ்தீப் சிங் மும்பை அணியில் இணைந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்ததும் அணி முழுமையடைந்துள்ளதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது அணியில் உள்ள வீரர்கள் பலரையும் ஒன்றாக வைத்திருக்க உண்மையில் முயற்சி செய்து வருகிறேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாக 6 வீரர்களை விடுவிக்க முடிவு செய்தோம். 19 வீரர்களை தக்கவைத்துள்ளோம். டிரேடிங் மூலமாக ஹார்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது எங்களிடம் அனைத்து துறைகளையும் பூர்த்தி செய்துள்ள சிறப்பான அணி உள்ளது.

மார்கோ யான்சென், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷஷாங் சிங், கூப்பர் கானலி போன்ற ஆல்ரவுண்டர்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இணைந்துள்ளார். அணியில் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என அனைவரும் இருக்கிறார்கள் என்றார்.

summary

Punjab Kings head coach Ricky Ponting has stated that the team has become complete following the addition of Hardik Pandya to the squad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.