FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையும் ஹார்திக் பாண்டியா?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

32 வினாடிகள் முன்பு
ஹார்திக் பாண்டியா - படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
பகிர்:

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இருப்பினும், கடந்த மூன்று சீசன்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனையடுத்து, ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வேறு அணிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளால் அவர் டிரேடிங் முறையில் வாங்கப்படலாம் என்ற தகவலும் பரவியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் தங்களது அணிக்கு வாங்க பல்வேறு அணிகளுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்திக் பாண்டியா டிரேடிங் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Reports have emerged suggesting that Indian all-rounder Hardik Pandya is set to join the Punjab Kings team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments