முதல் டி20: ஹாரி ப்ரூக் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மெல்போர்னில் இன்று (நவம்பர் 21) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
ஹாரி ப்ரூக் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டொனால்டு 10 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் டாம் பாண்டன் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹாரி ப்ரூக் 28 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். டாம் பாண்டன் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஜோர்டான் காக்ஸ் 27 ரன்கள், சாம் கரண் 21 ரன்கள் மற்றும் லியம் டாஸன் 17 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் நிகில் சௌதரி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோயல் டேவிஸ், ரைலி மெரிடித், பென் துவார்ஷூயிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.