முகப்பு

டெவான் கான்வே அரைசதம்: 233 ரன்கள் பின்னிலையில் நியூசிலாந்து!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் குறித்து...

டெவான் கான்வே அரைசதம்: 233 ரன்கள் பின்னிலையில் நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணி வீரர்களின் போஸ்டர்கள் - படங்கள்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ், பிசிசிஐ
பகிர்:

வெலிங்டனில் நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 720 ரன்கள் எடுத்திருந்த வேளையில் டிக்ளேர் செய்தது.

தற்போது, நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவைவிட நியூசிலாந்து 233 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Advertisement

Advertisement

டாம் லாதம் பும்ரா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். ஹென்றி நிகோலஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை துருவ் ஜுரெல் அட்டகாசமான ஃபீல்டிங் மூலம் கேட்ச் எடுத்தார்.

பொறுமையாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் (59*) அடித்துள்ளார். இவருடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா ஆட்ட நேர முடிவில் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இருவருமாக இணைந்து 137 பந்துகள் விளையாடி விக்கெட் கொடுக்காமல் 59 ரன்கள் சேர்த்தார்கள். ஐந்தாம் நாளில் இந்தியா வெல்ல 8 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

summary

Devon Conway hits a half-century; New Zealand trail by 233 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.