இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து நியூசி. வீரர் டெவான் கான்வே விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகியுள்ளதைப் பற்றி...
பயிற்சியில் சக வீரர் மேட் ஹென்றியுடன் மோதி காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நேற்றுமுன் தினத்துடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவ. 4) தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும் விக்கெட் கீப்பருமான டெவான் கான்வே காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
Senior New Zealand batter Devon Conway has been ruled out of the first ODI against India here on Wednesday owing to a concussion that he suffered after colliding with teammate Matt Henry during a training session here.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.