முகப்பு

டேரில் மிட்செல் - கிளன் பிலிப்ஸின் தடுப்பாட்டத்தைப் பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்த கிளன் பிலிப்ஸ் - டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப்பை முன்னாள் இந்திய வீரர் பாராட்டியுள்ளார்.

30 வினாடிகள் முன்பு
டேரில் மிட்செல் - கிளன் பிலிப்ஸின் தடுப்பாட்டத்தைப் பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!
டேரில் மிட்செல் - கிளன் பிலிப்ஸ் - படம் | AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்த டேரில் மிட்செல் - கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பை முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 352 ரன்கள் வலுவான முன்னிலையைப் பெற்றது.

போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்திருக்கையில் 5-வது விக்கெட்டினை இழந்தது. அதன் பின், டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டினை இழக்காமல் போராடி டிரா செய்தது. இவர்கள் இருவரும் இணைந்து 312 பந்துகள் விளையாடினர். இவர்களது சிறப்பான ஆட்டம் நியூசிலாந்து அணியின் தோல்வியைத் தவிர்த்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்த டேரில் மிட்செல் - கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பை முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் இணைந்து 300 பந்துகளுக்கும் அதிகமாக விளையாடியது மிகப் பெரிய விஷயம். ஆடுகளம் அவர்களுக்கு உதவும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால், அவர்கள் இருவரும் மிகவும் அற்புதமாக விளையாடினர். விக்கெட்டினை இழக்காமல் அவர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என்றார்.

டேரில் மிட்செல் 186 பந்துகளில் 49 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 126 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

summary

A former Indian player has praised the partnership between Glenn Phillips and Daryl Mitchell, who displayed excellent defensive play to secure a draw in the first Test match against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.