2-வது டி20: இருவர் அரைசதம் விளாசல்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி குயீன்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 24) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இங்கிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நிகில் சௌதரி 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோயல் டேவிஸ் 39 ரன்கள், ஜேக் ஃபிரேஸர் மெக்கர்க் 27 ரன்கள், ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் பென் துவார்ஷூயிஸ் தலா 18 ரன்கள் எடுத்தனர். சாம் கரண் வீசிய 20-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். அவர் 4 பந்துகளில் 18* ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் ஹென்றி க்ரோகோம்ப் மற்றும் சாம் கரண் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
நியூரின் டொனால்டு, பில் சால்ட் அரைசதம் விளாசல்! இங்கிலாந்து அபார வெற்றி!
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் மற்றும் நியூரின் டொனால்டு அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய நியூரின் டொனால்டு 32 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டாம் பாண்டன் 26* ரன்களும், கேப்டன் ஹாரி ப்ரூக் 10* ரன்களும் எடுத்தனர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூரின் டொனால்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.